பள்ளியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு : 5-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை
பதிவு : ஜூன் 18, 2019, 03:49 PM
தாம்பரத்தில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக 5 முதல் 8ஆம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. குடிப்பதற்கு கூட, தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மருத்துவமனைகள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் தண்ணீர் இன்றி வாடிக்கையாளர்கள் தவிக்கின்றனர். இந்நிலையில், கிழக்கு தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 5 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறையின் அனுமதி பெற்று, விடுமுறை விடப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதிக மழை பெய்தால் பள்ளிக்கு விடுமுறை அளிப்பது வழக்கம். ஆனால், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பள்ளிக்கு தற்போது விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

690 views

பிற செய்திகள்

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை : நாகையில் 2 பேர் கைது

நாகையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 2 பேர் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

6 views

இன்று கிராம அஞ்சல் ஊழியர் தேர்வு - 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது

தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட 4 நகரங்களில் கிராமிய அஞ்சல் துறை ஊழியர் பணியிடங்களுக்குகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.

2 views

இந்திய விண்வெளி சாதனை : ஒரு பார்வை

சந்திரயான்-2 நாளை அதிகாலை விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில், விண்வெளித்துறையில் இஸ்ரோவின் பயணம் பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு...

26 views

சுகாதாரம் உள்பட அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது - வெங்கையா நாயுடு

சுகாதாரம் உள்பட அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குவதாக குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

8 views

அத்திவரதர் வைபவம் : "பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது" - விஜயபாஸ்கர்

அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு, பக்தர்கள் நலனுக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

36 views

ராமர் நிறப் பட்டு அலங்காரத்தில் அத்திவரதர்... காஞ்சியில் குவிந்த பக்தர்கள்

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

51 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.