5 ஆண்டு சட்டப்படிப்பு - கட்ஆப் மதிப்பெண் வெளியீடு

5 ஆண்டு சட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கட்ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
5 ஆண்டு சட்டப்படிப்பு - கட்ஆப்  மதிப்பெண் வெளியீடு
x
5 ஆண்டு சட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கட்ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 17 மற்றும் 18 ந் தேதிகளில் இதற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சீர்மிகு சட்டப்பள்ளியில் உள்ள B.A.LLB, B.B.A.LLB, B.Com.LLB மற்றும் B.C.A.LLB   ஆகிய 5 ஆண்டு சட்டப்படிப்புகளில்  ஒவ்வொரு பிரிவிலும் 156 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இதற்கான விண்ணப்பங்கள் மே  மாதம் 16 ந் தேதி முதல் 31ந் தேதி வரையில் வழங்கப்பட்டன. விண்ணப்பித்த மாணவர்களின்  மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, கட்ஆப் மதிப்பெண்களை,  அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பித்த 2300 மாணவர்களில், தகுதியான 1899 பேருக்கு தரவரிசை மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் B.Com.LLB, சட்டப்படிப்பில் 524 பேருக்கும், B.C.A.LLB சட்டப்படிப்பில் 324 பேருக்கும், கட்ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு, வருகிற 17,18 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்