காஷ்மீர் ஆற்றுவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரர் : இதுவரை கண்டு பிடிக்காததால் பெற்றோர் வேதனை

காஷ்மீரில் ஆற்றுவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட, வேலூரைச் சேர்ந்த ராணுவ வீரர் இதுவரை கண்டுபிடிக்கப்படாதாதால் அவரது பெற்றோர் வேதனை அடைந்துள்ளனர்.
காஷ்மீர் ஆற்றுவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரர் : இதுவரை கண்டு பிடிக்காததால் பெற்றோர் வேதனை
x
காஷ்மீரில் ஆற்றுவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட, வேலூரைச் சேர்ந்த ராணுவ வீரர் இதுவரை கண்டுபிடிக்கப்படாதாதால் அவரது பெற்றோர் வேதனை அடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை பகுதியை சேர்ந்தவர் ராணுவ வீரர் சபரிநாதன். காஷ்மீரில் கடந்த 8 ஆம் தேதி,  ரோந்து பணியின்போது ஆற்றின் மரப்பாலம் உடைந்ததில் 10 ராணுவ வீரர்கள் ஆற்றுக்குள் விழுந்து விட்டனர். அதில் ஏழு பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், சபரிநாதன் உள்பட மூன்று பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இது குறித்து ராணுவத்தினர் அளித்த தகவலுக்கு பின்னர், இதுவரை சபரிநாதன் மீட்கப்படவில்லை என்பதால் வேதனை அடைந்துள்ள அவரது பெற்றோர், மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்