திருவேற்காடு : தனியார் குடோனில் தீ விபத்து

சென்னை திருவேற்காடு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜலகண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது.
திருவேற்காடு : தனியார் குடோனில் தீ விபத்து
x
சென்னை திருவேற்காடு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜலகண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. அப்போது பட்டாசு வெடிக்கப்பட்டது. அப்போது அருகில் இருந்த குப்பைக்கிடங்கில் தீப்பற்றியது. தொடர்ந்து பரவிய தீயானது, அந்த பகுதியில் இருந்த பழைய பொருள் சேமித்து வைக்கும் குடோனுக்கும் பரவியது. இதில் குடோனில் இருந்த பொருட்கள் முழுவதும் தீக்கிரையாகின. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் கும்பாபிஷேகத்தக்கு வந்த பக்தர்கள் விபத்தால் ஏற்பட்ட கரும்புகையால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்