குடிநீர் திட்ட பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரை முற்றுகையிட்ட மக்கள்

கோபிசெட்டிபாளையம் அருகே குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட கிணற்றை மூடும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், ஆட்சியரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
x
சின்னகுளம் பகுதியில் கிணறு அமைத்து, கெட்டிச்செவியூர் ஊராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சின்னகுளம் மக்கள், தோண்டப்பட்ட கிணற்றில் மண்ணை தள்ளி மூடும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை  கிராமமக்கள் முற்றுகையிட்டு, குடிநீர் திட்ட பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் எடுத்தால், 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் கதிரவன், குடிநீர் திட்டப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மக்களிடம் கருத்து கேட்டு, குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதா நிறுத்துவதா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்