ஓய்வூதிய ஒப்படைப்பு நிதியை பிடித்தம் செய்ய இடைக்கால தடை

ஓய்வூதிய ஒப்படைப்பு நிதியை வருங்கால வைப்பு நிதி ஆணையம் பிடித்தம் செய்ய இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ஓய்வூதிய ஒப்படைப்பு நிதியை பிடித்தம் செய்ய இடைக்கால தடை
x
தமிழ்நாடு குடிமைப் பொருள் கழக ஓய்வூதிய சங்கம் மற்றும் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல்  மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள், ஆவின் மற்றும் ராம்கோ ஊழியர்கள், அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள்  ஆகியோர் சார்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  அதில், "கடந்த 2003-ம் ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியத்தில் 200 மாதங்களை கடந்தும்  ஓய்வூதிய ஒப்படைப்பு நிதி பிடித்தம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவணை முடிந்த பிறகும் பிடித்தம் செய்வதை நிறுத்தி முழு ஓய்வூதியம் வழங்கக் கோரி வருங்கால வைப்பு நிதி ஆணையத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி மகாதேவன், ஓய்வூதிய ஒப்படைப்பு நிதியை பிடித்தம் செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்