சென்னை அருகே ஓட்டுநர் வேலை கேட்பது போல் நடித்து லாரி கடத்தல்

சென்னை அருகே ஓட்டுநர் வேலை கேட்டுவந்தவர் லாரியை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை அருகே ஓட்டுநர் வேலை கேட்பது போல் நடித்து லாரி கடத்தல்
x
சென்னை அருகே ஓட்டுநர் வேலை கேட்டுவந்தவர், லாரியை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆவடி அடுத்த கோவர்த்தனகிரி பகுதியில் பழனி என்பவர் சொந்தமாக டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். அவரிடம் தாம் ஒரு லாரி ஓட்டுனர் என அறிமுகம் செய்துகொண்ட ராஜதுரை என்ற நபர், வேலை தருமாறும் கோரியுள்ளார். அசல் ஓட்டுநர் உரிமத்தை கொடுத்தால் பணி தருவதாக கூறிய பழனி, மதிய உணவு சாப்பிட வீட்டுக்குச் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது, ராஜதுரை என்ற மர்ம நபர், லாரியை கடத்தியது தெரியவந்தது. போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில், ஆவடி அருகே சுற்றித் திரிந்த ராஜதுரையை மடக்கிப் பிடித்த போலீசார், பள்ளிக்கரணையில் மறைத்து வைத்திருந்த லாரியையும் பறிமுதல் செய்தனர்.நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட லாரி திருடன் ராஜதுரை, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

Next Story

மேலும் செய்திகள்