பார்வையாளர்களை கவர்ந்த பல வகை மலர்கள் : கோடை விழா - களைகட்டிய படகுப் போட்டி

சேலம் ஏற்காட்டில் கோடை விழா களைகட்டி வருகிறது. விழாவின் இரண்டாம் நாளான இன்று சிறப்பு ஏற்பாடாக படகுப்போட்டி நடத்தப்பட்டது.
பார்வையாளர்களை கவர்ந்த பல வகை மலர்கள் : கோடை விழா - களைகட்டிய படகுப் போட்டி
x
சேலம் ஏற்காட்டில் கோடை விழா களைகட்டி வருகிறது. விழாவின் இரண்டாம் நாளான இன்று சிறப்பு ஏற்பாடாக படகுப்போட்டி நடத்தப்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து பல வகை மலர்களால் வடிவமைக்கப்பட்டிருந்த சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முகப்பு, விமானப்படை விமானி அபிநந்தன் பயணித்த விமானம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. தொடர்ந்து சுற்றுலா பயணிகளை உற்சாகமூட்டும் விதமாக பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்