ஆகஸ்டு மாதம் நாங்குநேரி இடைத்தேர்தல் ? : வேலூர் தொகுதியுடன் சேர்த்து நடத்த பரிசீலனை

தமிழகத்தில் காலியாக இருக்கும் நாங்குநேரி தொகுதியில், வருகிற ஆகஸ்டு மாதம், இடைத்தேர்தல் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆகஸ்டு மாதம் நாங்குநேரி இடைத்தேர்தல் ? : வேலூர் தொகுதியுடன் சேர்த்து நடத்த பரிசீலனை
x
தமிழகத்தில் காலியாக இருக்கும் நாங்குநேரி தொகுதியில், வருகிற ஆகஸ்டு மாதம், இடைத்தேர்தல் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எச். வசந்தகுமார் ,  நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ பதவியை  ராஜினாமா செய்தார். எனவே, நாங்குநேரி தொகுதி காலியாக இருப்பது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ, முறைப்படி, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். இதற்கிடையே, பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வேலூர் மக்களவை தொகுதி தேர்தலுடன் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி, இடைத் தேர்தலையும் சேர்த்து நடத்த, தேர்தல் ஆணையம் தீவிரமாக பரிசீலித்து வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்