காதலரை திருமணம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு : தனியார் பள்ளி ஆசிரியை தூக்கு போட்டு தற்கொலை

பொள்ளாச்சி அருகே காதலரை திருமணம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் தனியார் பள்ளி ஆசிரியை, விடுதியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார்.
காதலரை திருமணம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு : தனியார் பள்ளி ஆசிரியை தூக்கு போட்டு தற்கொலை
x
பொள்ளாச்சி அருகே காதலரை திருமணம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் தனியார் பள்ளி ஆசிரியை, விடுதியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார். நாமக்கல் மாவட்டம் வேட்டம்பாடியை சேர்ந்த பிரதீபா, கிணத்துக்கடவில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 4-வகுப்பு ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக வேறு ஜாதியை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரதீபா காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதையடுத்து உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்