சொகுசு பேருந்து மரத்தில் மோதி 10க்கும் மேற்பட்டோர் காயம்

மதுராந்தகத்தில் அதிவேகமாக வந்த சொகுசு பேருந்து ஒன்று மரத்தில் மோதியதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
சொகுசு பேருந்து மரத்தில் மோதி 10க்கும் மேற்பட்டோர் காயம்
x
மதுராந்தகம் அருகே திருச்சி -  சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தபால்மேடு என்ற இடத்தில் அதிகாலை கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த சொகுசுப் பேருந்து சாலையில் மற்றொரு வாகனத்தை முந்த முற்பட்ட போது நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தின் போது பேருந்து மரத்தில் மோதியதால் அதன் அருகே படுத்திருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மரம் இருந்ததால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்