காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு : நீர்வீழ்ச்சியில் சீராக விழும் தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவியில் தண்ணீர் சீராக விழுவதை தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு : நீர்வீழ்ச்சியில் சீராக விழும் தண்ணீர்
x
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து ஆயிரத்து 900 கனஅடியாக அதிகரித்து, அருவிகளில் சீராக தண்ணீர் விழுகிறது. இதன் காரணமாக அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, நண்பர்கள், உறவினர்கள் கூட்டத்துடன் அதிக அளவில் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர். ஒரு சில சுற்றுலா பயணிகள் பரிசிலில் பயணம் மேற்கொண்டனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் ஒகேனக்கல் அருவி பகுதி களைகட்டியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்