பார் உரிமையாளர் தற்கொலை வழக்கு : மாமல்லபுரம் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மாற்றம்

பார் உரிமையாளர் தற்கொலை வழக்கில் மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
பார் உரிமையாளர் தற்கொலை வழக்கு : மாமல்லபுரம் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மாற்றம்
x
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் பகுதியை சேர்ந்த நெல்லையப்பன், போலீஸார் மாமூல் கேட்டு தொந்தரவு செய்வதாகக் கூறி,  கடந்த 29-ம் தேதி டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு  தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அவர் இறப்பதற்கு முன்பு பதிவு செய்த வீடியோவில் மாமல்லபுரம் டி.எஸ்.பி. சுப்புராஜ், திருப்போரூர் காவல் ஆய்வாளர் கண்ணன், கேளம்பாக்கம் ஆய்வாளர் பாண்டி மற்றும் அ.தி.மு.க. பிரமுகர் ஆனந்த்துக்கு லஞ்சம் பணம் கொடுத்தது தொடர்பான தகவல்களைத் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், மாமல்லபுரம் டி.எஸ்பி. சுப்புராஜ், திருப்போரூர், கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர்கள் கண்ணன், பாண்டி,  உள்ளிட்டோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றபட்டனர். இதனிடையே, மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் ரவிகுமார் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும்,  உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு ஆயுதப்படை பிரிவுக்கும் மாற்றி,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ்ஹதிமணி உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்