"மோடி எதிர்ப்பு அலை வீசவில்லை..." - ஆடிட்டர் குருமூர்த்தி ட்விட்டரில் கருத்து

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை வீசவில்லை என்று ஆடிட்டரும், ஆர்.பி.ஐ வங்கியின் பகுதி நேர இயக்குநருமான குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மோடி எதிர்ப்பு அலை வீசவில்லை... - ஆடிட்டர் குருமூர்த்தி ட்விட்டரில் கருத்து
x
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை வீசவில்லை என்று ஆடிட்டரும், ஆர்.பி.ஐ வங்கியின் பகுதி நேர இயக்குநருமான குருமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், அதிமுக 2 தொகுதிகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது எனவும்  4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் 5 தொகுதிகளில்  தோல்வி கண்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பாஜக போட்டியிட்ட 2 தொகுதிகளில் 2 லட்சத்துக்கு குறைவான வாக்கு வித்தியாசத்திலும், 2  தொகுதிகளில் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்திலும் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது எனவும் மோடி எதிர்ப்பு அலை வீசியிருந்தால் அனைத்து தொகுதிகளிலும் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோல்வியை சந்தித்திருக்கும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். அப்படி என்றால், தமிழகத்தில் யாருக்கு எதிரான அலை வீசியது என்றும் குருமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்