ஜூன் 2-ஆவது வாரத்தில் பேரவைக் கூட்டத் தொடர்

தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடரை ஜூன் 2-ஆவது வாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 2-ஆவது வாரத்தில் பேரவைக் கூட்டத் தொடர்
x
தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடரை ஜூன் 2-ஆவது வாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 13 அல்லது 14-ஆம் தேதி பேரவைக் கூட்டத்தைக் கூட்ட ஒப்புதல் அளிக்கும்படி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆளுநரிடம் இருந்து உரிய பதில் வரப் பெற்றதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என சட்டப் பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்பின், தேர்தல் காரணமாக துறை ரீதியான மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான பேரவைக் கூட்டத் தொடர், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. தேர்தல் முடிந்த நிலையில், பேரவைக் கூட்டத் தொடரை தொடங்குவதற்கான பணிகளை பேரவைச் செயலகம் தொடங்கியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்