பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த அதிகாரிகள்

திருச்சியில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த அதிகாரிகள்,15 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த அதிகாரிகள்
x
திருச்சியில்  பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த அதிகாரிகள்,15 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். திருச்சி மேற்கு வட்டார போக்குவரத்து அலுவகத்தில் பள்ளி வாகனங்களுக்கான சோதனை நடத்தப்பட்டது. பள்ளி பேருந்தின் தரம், அவசரக் கால வழி, பேருந்தில் முதல் உதவி பெட்டி, தீயணைப்பு கருவி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா என்று அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். மேலும் பள்ளி பேருந்து ஓட்டுநர்களுக்கு, இலவச கண் பார்வை கண்பரிசோதனையும், தீ தடுப்பு வழிமுறைகளும் பயிற்சியும் வழங்கப்பட்டது. இதில் விதிமுறைகள் முறையாக இல்லாத பேருந்துகளை கொண்ட பள்ளிகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்