வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் ஜெராக்ஸ் இயந்திரங்கள் ஏன் ? - தி.மு.க. வேட்பாளர் சரவணன்
பதிவு : மே 21, 2019, 07:01 PM
மதுரை அரசு மருத்துவ கல்லூரி மைதானத்தில் ஜெராக்ஸ், கம்ப்யூட்டர் மற்றும் சில எலக்ட்ரானிக் பொருட்கள் பேப்பர் சுற்றப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்பட்டது சர்ச்சையை எழுப்பி உள்ளது.
மதுரை மக்களவை தொகுதி மற்றும் திருப்பரங்குன்றம் பேரவை தொகுதி வாக்குகள் எண்ணப்படும் மதுரை அரசு மருத்துவ கல்லூரி மைதானத்தில் ஜெராக்ஸ், கம்ப்யூட்டர் மற்றும் சில எலக்ட்ரானிக் பொருட்கள் பேப்பர் சுற்றப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்பட்டது  சர்ச்சையை எழுப்பி உள்ளது. இதுகுறித்து தகவலறிந்த திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளர் சரவணன் அப்பொருட்களை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்தார். எலெக்ட்ரானிக் சாதனங்களை கொண்டு செல்வது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், இதன்மூலம்  வாக்குப் பதிவு இயந்திரங்களில் மிகப் பெரிய மோசடியை நிகழ்த்தக் கூடும் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.