நவம்பர் பருவத்தேர்வில் 6 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை - அண்ணா பல்கலை கழகம்

கடந்த ஆண்டு நவம்பர் பருவத்தேர்வில் அண்ணா பல்கலை கழகத்தை சேர்ந்த 6 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது
நவம்பர் பருவத்தேர்வில் 6 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை - அண்ணா பல்கலை கழகம்
x
பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்குவதற்கு முன் அந்த கல்வி ஆண்டின் தேர்ச்சி விகித‌த்தை வெளியிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த‌து. அதன் படி, அண்ணா பல்கலை கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன், ஏப்ரல், மே, நவம்பர், டிசம்பர் ஆகிய பருவ தேர்வு தேர்ச்சி விகிதங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அண்ணா பல்கலை கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில், சேலம் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹண்ட்லூம் டெக்னாலஜி கல்லூரி 88 புள்ளி 12 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, 74 பொறியியல் கல்லூரிகள், 5 முதல் 10 சதவீதம் மாணவர்களும், 27 கல்லூரிகளில் 5 சதவீத‌த்திற்கும் குறைவான மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக அரியலூர் கே.சி.சி கல்லூரி, தஞ்சாவூர் எஸ்.ஆர்.எம். கல்லூரி , திண்டுக்கல் அறிஞர் அண்ணா கல்லூரி , கன்னியாகுமரி தமிழன் கல்லூரி, பெரம்பலூர் எலிசபெத் கல்லூரி, கோவை ஸ்டெடிவோல்ட் கல்லூரி என 6 கல்லூரிகளில் நவம்பர் மாதம் நடந்த பருவ தேர்வில், ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெற வில்லை என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்