குற்றாலநாதர் கோவிலில் சந்தானதி தைலம் தயாரிக்கும் பணி...இரவு, பகல் பாராமல் 90 நாள் நடக்கிறது...

பல்வேறு தனிச்சிறப்புகளை கொண்ட திருக்குற்றால நாதர் கோவிலில், சந்தானதி தைலம் தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.
குற்றாலநாதர் கோவிலில் சந்தானதி தைலம் தயாரிக்கும் பணி...இரவு, பகல் பாராமல் 90 நாள் நடக்கிறது...
x
பல்வேறு தனிச்சிறப்புகளை கொண்ட திருக்குற்றால நாதர்  கோவிலில், சந்தானதி தைலம் தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது. இக்கோவிலில், விஷ்ணு பெருமானை அகத்திய முனிவர் தலையில் கை வைத்து சைவ தலமாக மாற்றிய தாகவும், இதனால் இங்குள்ள குற்றால நாதருக்கு தலைவலி ஏற்படும் என வரலாறுகள் கூறுகின்றன. இந்த தலைவலியை போக்க, குற்றாலநாதருக்கு சந்தனாதி தைலம் வழங்கப்பட்டு வருகிறது. வருடத்திற்கு 2 முறை தயாரிக்கப்படும் இந்த தைலம், பக்தர்களுக்கும் விற்கப்படுகிறது. இரவு பகல் என இடைவிடாமல் 90 நாட்கள் இந்த தைலம் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரிகள், பக்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்