பாசன வாய்க்கால்கள் வழியாக உட்புகும் கடல்நீர்... உவர் நிலங்களாக மாறும் விவசாய நிலங்கள்

பாசன வாய்க்கால்கள் வழியாக கடல்நீர் உட்புகுவதால், கடைமடை பகுதியில் கதவுடன் கூடிய தடுப்பணைக் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாசன வாய்க்கால்கள் வழியாக உட்புகும் கடல்நீர்... உவர் நிலங்களாக மாறும் விவசாய நிலங்கள்
x
மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி நீர் கல்லணை வழியாக கடைமடை பகுதியான நாகைக்கு வந்து சேர்கிறது. அதனை நம்பி விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபட்டு வரும் நிலையில், நாகப்பட்டினம் தேவநதி பாசன வாய்க்கால்கள் வழியாக  கடல் நீர் உட்புகுந்து வருகிறது. அதனால் கடைமடை பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உவர் நிலங்களாக மாறியுள்ளது. அதனால் வேதனை அடைந்துள்ள விவசாயிகள், கடல் நீர் உட்புகுவதை தடுக்க கடைமடை பகுதியான பாலையூர் தேவநதியிலும், வெட்டாற்றிலும் கதவுடன் கூடிய தடுப்பணை கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்