கோட்சே குறித்து தாம் பேசியது சரித்திர உண்மை - கமல்ஹாசன்
பதிவு : மே 15, 2019, 11:06 PM
கோட்சே குறித்து தாம் பேசியது சரித்திர உண்மை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரத்தின் போது கோட்சே குறித்து கமல்ஹாசன் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு  தெரிவித்தனர். கமல்ஹாசனுக்கு எதிராக பல்வேறு வழக்குகளும் தொடரப்பட்டன. இதையடுத்து தமது தேர்தல் பிரசாரத்தை 2 நாட்கள் நிறுத்தி வைத்த கமல்ஹாசன் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் சக்திவேலுவை ஆதரித்து தோப்பூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,  கோட்சே குறித்து தாம் பேசியது சரித்திர உண்மை என்று கூறினார். தாம் வன்முறையை தூண்டுவதாக கூறுவது மனதை காயப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். அவமானங்களை கண்டு கவலைப்படவில்லை என்று கூறிய அவர், தாம் யாரையும் சண்டைக்கு இழுக்கவில்லை என்றார். இந்துக்களை புண்படுத்தினால் தமது வீட்டில் உள்ளவர்களே கோபிப்பார்கள் என்று கூறிய கமல்ஹாசன், தமது பேச்சு முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்தார்.  

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கோயில்கள் சிறப்பாக இருக்கும்
பின்னர் மேல அனுப்பானடியில் பிரசாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சி  ஆட்சிக்கு வந்தால் கோயில்கள் பல மடங்கு சிறப்பாக இருக்கும் என்று கூறினார். தமது எஞ்சிய வாழ்க்கை முழுவதும் மக்களுக்காக சேவை செய்ய போவதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

மதுரையில் கமலுக்கு எதிராக போராட்டம்...

இந்துக்கள் மனதை புண்படுத்தியதாக கூறி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசனை கண்டித்து, மதுரையில் இந்து முன்னணி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

507 views

பிற செய்திகள்

சாத்தனூர் அணை நீர்மட்டம் 67 அடியாக சரிவு

சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து இல்லாததால் அணையின் நீர்மட்டம் 67 அடியாக சரிந்துள்ளது.

103 views

போஷான் அபியான் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களுக்கான பட்டியலில் முதலிடம் இடம் பிடித்த தமிழகம்

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

8 views

ஆபரண தங்கம் விலை ஒரே நாளில் ரூ.108 உயர்வு

ஆபரண தங்கம் விலை தொடர்ச்சியாக விலை ஏற்றம் கண்டு வரும் நிலையில் மீண்டும் அதிகபட்சமாக 29 ஆயிரம் ரூபாய் என்கிற அளவை தொட உள்ளது.

57 views

சென்னையில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது - ஏ.கே. விஸ்வநாதன்

அசம்பாவிதங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

69 views

8 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவடைந்து வரும் ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு மோசமான சரிவைக் கண்டுள்ளது.

54 views

2021-ம் ஆண்டுக்குள் கொள்ளிடம் புதிய பாலம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது - சத்யகோபால்

திருச்சியில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முழுமை பெறும் என வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உறுதி அளித்துள்ளார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.