கணவன் - மனைவி இடையே ஈகோ : அரசு பள்ளி ஆசிரியை தூக்கு போட்டு தற்கொலை

கணவன் - மனைவி இடையிலான ஈகோ பெரும் சோகத்தை தரும் என்பது அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
x
கரூர் மாவட்டம் வெள்ளியனை பகுதியை சேர்ந்த ராஜ்குமார், அங்குள்ள தனியார் மருந்தகத்தில் பணியாற்றி வருகிறார். அவரின் மனைவி தீபா, அரசு பள்ளி ஆசிரியை. எடப்பாடி அருகே வெள்ளக்கவுண்டனூர் பகுதிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டதால், ஆசிரியை தீபா அங்கு தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், வேலையை விட்டுவிட்டு தன்னுடன் வந்துவிடுமாறு ராஜ்குமாரிடம் தீபா பலமுறை வலியுறுத்தி அழைத்ததாக கூறப்படுகிறது. 

சம்பவத்தன்று சொந்த ஊருக்கு வந்த தீபா, கணவரை தன்னுடன் வருமாறு அழைத்த நிலையில், ராஜ்குமார் அங்கிருந்து வர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தீபா, கோபமாக அங்கிருந்து வெள்ளக்கவுண்டனூருக்கு சென்றுவிட்டார். அதன்பிறகு, மனைவி தீபாவை சமாதானம் செய்ய கணவர் ராஜ்குமார் தனது குழந்தையுடன் வெள்ளக்கவுண்டனூர் சென்றுள்ளார். அங்கு வீட்டில் தீபா  தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். அதிர்ச்சியடைந்த ராஜ்குமார், குழந்தையுடன் கதறி அழுதது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.  

ஆசிரியர் தீபாவை சூழலை உணர்ந்து கணவர் ராஜ்குமார் அனுசரித்திருந்தால் இந்த சோகம் நேர்ந்திருக்காது. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, விட்டுக்கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை என்ற பழமொழிகள் நம் காதுகளிலும் தொடர்ச்சியாக ஒலித்துக்கொண்டே இருந்தாலும் அதை கடைபிடிக்க மனம் மறுத்துவிடுகிறது. ராஜ்குமாரின் ஈகோ அவரின் வாழ்வில் பெரும் சோகத்தை சுவடாக்கியுள்ளது என்பது எல்லா கணவன் - மனைவிக்கும் பாடம்.

Next Story

மேலும் செய்திகள்