அரசு பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை - கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் விபரீதம்

சேலம் எடப்பாடி அருகே கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை - கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் விபரீதம்
x
கரூர் மாவட்டம் வெள்ளையனை பகுதியை சேர்ந்த ராஜ்குமார் அங்குள்ள தனியார் மருந்தகத்தில் பணியாற்றி வந்துள்ளார். அரசு பள்ளி ஆசிரியையான அவரது மனைவி தீபா, பணி மாறுதல் காரணமாக எடப்பாடி அருகே வெள்ளகவுண்டனூர் பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையல் ராஜ்குமாரை பணியை விட்டுவிட்டு தன்னுடன் வந்து தங்கிவிடுமாறு தீபா பல முறை அழைத்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கரூர் வந்த தீபா கணவரை தன்னுடன் வருமாறு அழைத்த நிலையில், ராஜ்குமார் அங்கிருந்து வர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தீபா கோபமாக அங்கிருந்து வெள்ளக்கவுண்டனூருக்கு கிளம்பியுள்ளார். இதையடுத்து, கணவர் ராஜ்குமார் கையில் குழந்தையை தூக்கிகொண்டு மனைவியை சமாதானம்செய்ய வெள்ளக்கவுண்டனூர் வந்தபோது தீபா வீட்டில் பிணமாக தூக்கில் தொங்கியுள்ளார். அதிர்ச்சியடைந்த ராஜ்குமார், குழந்தையுடன் கதறி அழுதது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. சம்பவம் குறித்து பூலாம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்