11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் இரட்டை மொழிப்பாட முறையே தொடர வேண்டும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

தமிழ்நாட்டில் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் இப்போது நடைமுறையில் உள்ள இரட்டை மொழிப்பாட முறையே தொடர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்
11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் இரட்டை மொழிப்பாட முறையே தொடர வேண்டும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
x
தமிழ்நாட்டில் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் இப்போது நடைமுறையில் உள்ள இரட்டை மொழிப்பாட முறையே தொடர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். ஒற்றை மொழிப் பாட முறையை அறிமுகப்படுத்தும் எண்ணம் எதுவுமில்லை என்று பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது சற்று நிம்மதியளிப்பதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆனாலும் மக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சத்தை முற்றிலுமாக போக்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது உள்ளவாறே, நான்கு முதன்மைப் பாடங்கள், இரண்டு மொழிப் பாடங்கள் என  ஆறு பாடங்கள் முறை தொடருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்