பாரதிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் திடீரென வெடித்து சிதறும் மின் மீட்டர்கள்

சேலம் மாவட்டம் ஆத்தூர் பாரதிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் மின் மீட்டர்கள் வெடிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாரதிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் திடீரென வெடித்து சிதறும் மின் மீட்டர்கள்
x
பாரதிபுரம் பகுதியில் உள்ள பவர் ஹவுஸில் இருந்து, ஆத்தூர் நரசிங்கபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.  இந்நிலையில் இரு நாட்களாக வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள மின் மீட்டர்கள் திடீரென வெடித்து எரிய தொடங்குவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி,  டிவி உள்ளிட்ட மின்சாதன பொருள்கள் பழுதடைவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் இதனை சரி செய்து  சீரான மின்வினியோகம் ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் பாரதிபுரம் பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். 



Next Story

மேலும் செய்திகள்