போலீசார் பறிமுதல் செய்த துப்பாக்கிகள் டம்மி...
பதிவு : மே 11, 2019, 03:46 AM
தேனி மாவட்டத்தில், கொலை வழக்கில் தேடப்பட்டவர் பதுங்கியிருந்த வீட்டில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக, போலீசார் பறிமுதல் செய்த துப்பாக்கிகள் டம்மி என தெரிய வந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில், குற்றவாளியாக போலீசார் சந்தேகிக்கும் எஸ்டேட் மணி என்பவர், போடி அருகே பொட்டல்களம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் முன்னால் மாவட்ட செயலாளர் கௌர் மோகன்தாஸ் என்பவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அங்கிருந்த கத்தி, அரிவாள் மற்றும் ஏ.கே .47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆறுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை பறிமுதல் செய்த போலீசார் உரிமையாளர் கௌர் மோகன்தாசை, தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து  விசாரணை  நடத்தி வருகின்றனர். அங்கிருந்து, கோவில் கலசங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், இச்சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி. பாஸ்கரனை தொடர்பு கொண்ட போது, கைபற்றப்பட்ட துப்பாக்கிகள் அனைத்தும் டம்மி துப்பாக்கிகள் என தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து கியு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

210 views

பிற செய்திகள்

ஜூலை 30 வரை பேரவை கூட்டத்தொடர் - சட்டப்பேரவை சபாநாயகர் தனபால்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28ந்தேதி தொடங்கி ஜூலை 30ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

7 views

காவிரி விவகாரம் : "கர்நாடகத்தை தமிழக அரசு தடுக்க வேண்டும்" - ராமதாஸ்

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, கர்நாடக அரசின் நடவடிக்கை உள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.

26 views

கோவில் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த 10 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.

21 views

பல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்கள் : தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

பல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

33 views

தஞ்சாவூர் : அக்கினியாறு கரையில் மணல் திருட்டு...

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருதங்காவயல் என்ற கிராமத்தில் உள்ள அக்கினியாறு கரையில் மணல் திருட்டிற்காக பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் கைப்பற்றப்பட்டது.

10 views

அ.தி.மு.க., வட்ட செயலாளரை வெட்டிய மர்ம கும்பல் கைது

சென்னை பல்லாவரத்தில் முன்விரோதம் காரணமாக அதிமுக வட்ட செயலாளரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

84 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.