"வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தின் வட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதகவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் அனல் காற்று வீசுமென்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தமிழகத்தின் வட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதகவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் அனல் காற்று வீசுமென்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் வீரகனூர் மற்றும் கெங்கவள்ளியில் 5 சென்டிமீட்டர் மழையும், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 4 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தருமபுரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர் உட்பட 15 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் அனல் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்