தி.மு.க. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மரணம் : ஸ்டாலின் நேரில் அஞ்சலி

முன்னாள் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் உடலுக்கு, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்.
தி.மு.க. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மரணம் : ஸ்டாலின் நேரில் அஞ்சலி
x
முன்னாள் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் உடலுக்கு, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார். கடந்த 2 ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவால் அவதிபட்டு வந்த மு.ராமநாதன் அதிகாலை 1.30 மணியளவில் உயிரிழந்தார். சட்ட மேலவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் தி.மு.க. உயர்மட்ட குழு உறுப்பினர் என பல பதவிகளில் இருந்த இவர், கோவை தென்றல் என்று தி.மு.வி.னரால் அழைக்கப்பட்டவர். கோவையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய திமுக தலைவர் ஸ்டாலின், கருணாநிதி உத்தரவை ஏற்று, இந்தி எதிர்ப்பு முதல், மிசா காலம் வரை அனைத்து போராட்டங்களிலும் பங்காற்றிய ராமநாதனின் இழப்பு ஈடு செய்ய முடியாத‌து என்றார்.  

Next Story

மேலும் செய்திகள்