படைப்பிரிவினர் குழந்தைகள் மருத்துவம் படிப்பது தொடர்பான வழக்கு

மத்திய அரசின் படைவீரர்களுக்கான முன்னுரிமை பட்டியலில், சில பிரிவுகளை நீக்கிய தமிழக அரசின் அரசாணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
படைப்பிரிவினர் குழந்தைகள் மருத்துவம் படிப்பது தொடர்பான வழக்கு
x
தமிழகத்தை சேர்ந்த படை வீரர்களுக்கான முன்னுரிமை அடிப்படையில் மருத்துவ இடம் வழங்கக் கோரி மாணவர் குறளரசன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பல்மருத்துவ படிப்பில் படைப் பிரிவினருக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை செயலர் 2018  ல் வெளியிட்ட அரசாணை, மனுதாரருக்கு பணியிலுள்ள ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான முன்னுரிமையை பெற முடியாமல் போயுள்ளது என்று நீதிபதி சுட்டிக்காட்டி உள்ளார். 
படைப்பிரிவில் பணிபுரிந்தவர்களுக்கு வழங்கும் சலுகை, படைப்பிரிவுகளில் தற்போது பணிபுரிபவர்களுக்கும் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று ம், பணியிலுள்ள ராணுவத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்காமல், உயர் கல்வியில் படைப் பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் நோக்கம் நிறைவேறாது என்றும் நீதிபதி தமது உத்தரவில் சுட்டிக்காட்டி உள்ளார். நடப்பு கல்வி ஆண்டு முதல் மருத்துவம், பல்மருத்துவ படிப்பில் பணியிலுள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளையும் சேர்க்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்