தி.மு.க. கொண்டு வரும் நம்பிக்கை இல்லா தீர்மானம் 3 எம்.எல்.ஏ.க்களின் பதவியை காப்பாற்றாது - தினகரன்

சபாநாயகர் மீது திமுக கொண்டு வரும் நம்பிக்கை இல்லா தீர்மானம் 3 எம்.எல்.ஏ.க்களின் பதவியை காப்பாற்றாது என்று தினகரன் தெரிவித்துள்ளார்
x
சபாநாயகர் மீது திமுக கொண்டு வரும் நம்பிக்கை இல்லா தீர்மானம் 3 எம்.எல்.ஏ.க்களின் பதவியை காப்பாற்றாது என்று  மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். 

அ.தி.மு.க. வை  பா.ஜ.கவோடு  இணைக்க முயற்சி
 


மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க.வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து ஐராவதநல்லூர் பகுதியில் தினகரன் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது பேசிய அவர், ஆளும் கட்சியினருக்கு இடைத்தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.இன்னும் சில நாட்களில் அ.தி.மு.க.வை பா.ஜ.கவோடு  இணைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தினகரன் குற்றம்சாட்டினார்.





Next Story

மேலும் செய்திகள்