கோமதி மாரிமுத்துக்கு அதிமுக சார்பில் 15 இலட்சம் வழங்கினார் பழனிசாமி

ஆசிய தடகளப்போட்டியில் த​ங்கப் பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு, அ.தி.மு.க. சார்பில் 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வழங்கினர்.
x
அ.தி.மு.க. சார்பில், கோமதி மாரிமுத்துவுக்கு 15 லட்சம் ரூபாயும், ஆரோக்கிய ராஜீவுக்கு 10 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் அறிவித்திருந்ந்தனர். அதன்படி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் பழனிசாமியின் வீட்டில்  கோமதி மாரிமுத்துவுக்கு பாராட்டு நிகழ்வு நடைபெற்றது.  அங்கு 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வழங்கி பாராட்டினர். அதனை பெற்றுக்கொண்ட கோமதி மாரிமுத்து, முதலமைச்சர் பழனிசாமிக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்