முதுமலையில் வன விலங்குகளின் வருகை அதிகரிப்பு
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலையில் வனவிலங்குகளின் வருகை அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகளின் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலையில் வனவிலங்குகளின் வருகை அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகளின் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். 321 சதுர கிலோ மீட்டர் பரப்பில் அமைந்துள்ள புலிகள் சரணாலயத்தில், புலி, கரடி, சிறுத்தை, யானை, காட்டெருமை, மான் மற்றும் அரிய வகை பறவைகள் உள்ளன. கடந்த 3 மாதங்களாக கடும் வறட்சி நிலவி வந்ததால், வன விலங்குகள் இடம் பெயர்ந்து சென்றன. இந்நிலையில் தற்போது நல்ல மழை பெய்து பசுமை திரும்பியுள்ளதால் வனவிலங்குகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் சரணாலயத்தில் கூட்டம் களைக்கட்ட தொடங்கியுள்ளது. சுற்றுலா பயணிகள் அடர்ந்த பகுதிக்குள் சென்று வனவிலங்குகளை கண்டு ரசித்து வருகின்றனர்.
Next Story