பெற்ற மகளிடமே தவறாக நடக்க முயன்ற வி.ஏ.ஓ. - 4 மாதங்களுக்கு பிறகு போக்சோ சட்டத்தில் கைது

பிறந்த நாளுக்கு ஆசி வாங்கச் சென்ற 12 வயது மகளிடம் தவறாக நடக்க முயன்ற தந்தையான வி.ஏ.ஓ பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பெற்ற மகளிடமே தவறாக நடக்க முயன்ற வி.ஏ.ஓ. - 4 மாதங்களுக்கு பிறகு போக்சோ சட்டத்தில் கைது
x
பிறந்த நாளுக்கு ஆசி வாங்கச் சென்ற 12 வயது மகளிடம் தவறாக நடக்க முயன்ற தந்தையான வி.ஏ.ஓ பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கடம்பூரில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய சரவணன்- செல்வி இருவரும் காதல் திருமணம் செய்த தம்பதிகள். தற்போது, இவர்கள் இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், இரண்டு பெண் குழந்தைகளுடன் செல்வி தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், சரவணனின் 12 வயது மூத்த மகள், தமது பிறந்தநாளை முன்னிட்டு தந்தையை பார்க்கச் சென்றுள்ளார். அப்போது, மது போதையில் இருந்த தந்தை சரவணன், பெற்ற மகளிடமே தவறாக நடக்க முயன்றுள்ளார். இது குறித்து மனைவி அளித்த புகாரின் பேரில், தேடப்பட்டு வந்த சரவணன், ரகசிய திருமணம் செய்து கொண்ட 2வது மனைவியை பார்க்கச் சென்ற போது, 4 மாதங்களுக்கு பிறகு போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.  சரவணன், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பெற்ற மகளையே பாலியல் ரீதியாக துன்புறுத்திய விஏஓ சரவணனை சஸ்பெண்ட் செய்து கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்