வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 9-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா - குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்பு

அனைவரும் சேர்ந்து உழைத்தால் சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் 3வது இடத்தை இந்தியா பிடிக்கும் என, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.
x
சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில்  9-ம் ஆண்டு  பட்டமளிப்பு விழா நடைபெற்றது.  இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற  குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.முன்னதாக விழாவில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக தலைவர் சதீஷ் ரெட்டி, தடகள வீராங்கனை பி.டி.உஷா உள்ளிட்ட 3 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம்  வழங்கப்பட்டது.மாணவ - மாணவிகளுக்கு  பட்டங்கள் மற்றும் தங்கப்பதக்கம் வழங்கி வெங்கையா நாயுடு பேசினார்.அப்போது,  இந்த நிகழ்ச்சியில் பட்டம் பெற வந்திருக்கும் மாணவர்களை வரவேற்கிறேன் என்றும், அவர்களை இந்த நிலைக்கு கொண்டு வர பாடுபட்ட பெற்றோர்களை வாழ்த்துகிறேன் என்றும் தமிழில் பேச்சை தொடங்கினார். வேலைக்கானது மட்டுமல்ல கல்வி என்ற அவர், அறிவை விரிவுப்படுத்துவது தான் என்றார்.ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே இனம் என்பது தான் நமது முழக்கம் என்றும், கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு மக்கள் இடம்பெயர்வதை மாற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அனைவரும் சேர்ந்து உழைத்தால் பொருளாதாரத்தில் 3வது இடத்தை இந்தியா பிடிக்கும் என்றும் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்