பீர்பாட்டிலால் காவலரை குத்திய பாமக நிர்வாகிகள் கைது - சமூக வலைதளங்களில் பரவும் பரபரப்பு வீடியோ
பதிவு : ஏப்ரல் 22, 2019, 01:01 AM
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் காவலரை பீர்பாட்டிலால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பாமக நிர்வாகிகளை விடுவிக்க வேண்டும் என காவல் ஆய்வாளருக்கு அதிமுக பிரமுகர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்துவரும் சந்திரசேகரன் கடந்த 15 ஆம் தேதி இரவு ஊர்காவல்படை வீரர் சிவக்குமாருடன் சேர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அலங்கியம் சாலை ரவுண்டானா அருகே கூட்டமாக நின்றிருந்த சிலரை கலைந்து செல்லுமாறு கூறியபோது அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தகராறில் ஈடுபட்டு அருகில் கிடந்த  பீர்பாட்டிலை  உடைத்து காவலரை குத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து  வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சி நகர செயலாளர் ஜெயேந்திரன் ராம்குமார் ஆகிய இருவரை கைது செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் ராசிபுரம் அதிமுக நகரச் செயலாளர் காமராஜ் ஆகியோர் காவல் ஆய்வாளரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்துள்ளவர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்றும் இல்லையென்றால்  ஊருக்குள் குடியிருக்க முடியாது என்றும் அதிமுக நகரச் செயலாளர் மிரட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் திருப்பூரில் இருந்து தாராபுரத்திற்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

936 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4339 views

பிற செய்திகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜப்பான் பயணம்

ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அங்கு இருநாட்டு வர்த்தகம், பாதுகாப்பு தொடர்பாக அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து பேச உள்ளார்.

17 views

அமெரிக்கா- சீனா இடையே வர்த்தக போர் எதிரொலி : இந்திய ஜவுளி ஏற்றுமதி உயரும் வாய்ப்பு

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது 25 சதவீதம் வரை கூடுதல் வரியை அமெரிக்கா விதித்ததை அடுத்து சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு வரியை உயர்த்தியது.

16 views

"தீவிரவாதத்தை ஒழித்து அமைதியை உருவாக்க வேண்டும்" - இம்ரான் கானுக்கு, மோடி வேண்டுகோள்

பிரதமராக மீண்டும் பதவியேற்க உள்ள மோடிக்கு, பாக். பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்

65 views

கோமாளி படத்தில் பள்ளி மாணவனாக நடிக்கும் ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி தனது 24-வது படமான கோமாளி படத்தில் பள்ளி மாணவனாக நடிக்கிறார்.

41 views

ஹெல்மெட் அணியவில்லை என்றால் பெட்ரோல் இல்லை - விபத்துக்களை குறைக்கு புதிய முயற்சி

விபத்தை குறைக்கும் விதமாக ஹெல்மெட் அணியவில்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்செந்தூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் நடைபெற்றது.

9 views

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படம் ஜூன் 14ம் தேதி திரைக்கு வருகிறது

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான "கனா" திரைப்படத்தை தொடர்ந்து, "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா" என்ற படத்தை தயாரித்துள்ளார்.

65 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.