பெண்களை இழிவாக பேசிய விவகாரம் - குற்றவாளிகளை கைது செய்யக் கோரி பேரணி

100க்கும் மேற்பட்ட மக்கள், பேரணியாக வந்து அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்களை இழிவாக பேசிய விவகாரம் - குற்றவாளிகளை கைது செய்யக் கோரி பேரணி
x
புதுக்கோட்டை அறந்தாங்கியில் தங்கள் சமூக பெண்களை இழிவாக பேசிய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி, அழியாநிலை கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள், பேரணியாக வந்து அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதைத்தொடர்ந்து,மாவட்ட துணை கண்காணிப்பாளர் கோகிலாவிடம் இது தொடர்பாக மனு அளித்தனர்.அதை பெற்றுக்கொண்ட டிஎஸ்பி கோகிலா உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து அவர்கள் அனைவரும் சென்றனர்.

ஒரு சமூகத்தினரை இழிவுபடுத்தி வாட்ஸ் அப்பில் செய்தி - 
பாதிக்கப்பட்ட சமூகத்தினர் தொடர் சாலை மறியல்



வாட்ஸ் அப்பில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்களை இழிவு படுத்தி பேசிய செய்தி பரவியதை தொடந்து சிவகங்கை, மற்றும் புதுகோட்டை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் பேராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சுமார்  3 ஆயிரம் பேர் ஊர்வலமாக வந்து சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 500க்கு மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்