ஒரே நாளில் 8 செ.மீ. மழை : அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கொடைக்கானல் பகுதியில் ஒரே நாளில் 8 சென்டி மீட்டர் மழை பெய்ததால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
ஒரே நாளில் 8 செ.மீ. மழை : அணைகளின் நீர்மட்டம் உயர்வு
x
கொடைக்கானல் பகுதியில் ஒரே நாளில் 8 சென்டி மீட்டர் மழை பெய்ததால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக நகருக்கு குடிநீர் வழங்கும் பழைய அணை, மற்றும் புதிய மனோரத்தினம் அணை, நட்சத்திர ஏரி உள்ளிட்டவைகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. பல்வேறு நீர் வீழ்ச்சிகளில் அதிக அளவு தண்ணீர் கொட்டி வருவதால் தரைப் பகுதியில் உள்ள பல்வேறு அணைகளுக்கு அதிக தண்ணீர் வருகிறது. கோடை மழை தொடர்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சுமார் ஒரு மணிநேரம் கொட்டி தீர்த்த மழை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. வெப்பம் தணிந்து இதமான காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மிதமான மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதியில் மிதமான மழை பெய்தது. வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இருநாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இந்நிலையில், நாகர்கோவில் வடசேரி, செட்டிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழை தொடர வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்