கழுதைகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட வாக்கு இயந்திரங்கள் : மலைவாழ் மக்கள் வாக்களிக்க ஏற்பாடு

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோட்டூர் மலை, ஏரிமலை ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கழுதைகள் மூலம் எடுத்து செல்லப்பட்டது.
கழுதைகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட வாக்கு இயந்திரங்கள் : மலைவாழ் மக்கள் வாக்களிக்க ஏற்பாடு
x
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  கோட்டூர் மலை, ஏரிமலை ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கழுதைகள் மூலம் எடுத்து செல்லப்பட்டது. போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 4 கழுதைகள் மூலம் பாதுகாப்பாக எடுத்து செல்லப்பட்டது. கழுதைகள் மூலம் எடுத்துச் செல்லப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பாதுகாப்பாக காவல்துறையினர் மற்றும்  வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களும் உடன் சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்