காங். தலைவர் ராகுல் காந்தி 12ம் தேதி தமிழகம் வருகை
பதிவு : ஏப்ரல் 10, 2019, 06:07 PM
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி வரும் 12ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகம் வர உள்ளார். இதற்கான மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த பணியை அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர் சஞ்சய் தத் நேரில் ஆய்வு செய்தார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வரும் 12ஆம் தேதி காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி சேலத்தில் நடைபெறும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகம் வர உள்ளார். சீலநாயக்கன்பட்டியில் நடைபெறும் இந்த பிரமாண்ட கூட்டத்தில், சேலம், கரூர், நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்து ஆதரவு திரட்ட உள்ளார். இதற்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பணியை இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சஞ்சய் தத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1129 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4511 views

பிற செய்திகள்

குன்னூர் : நாவல் பழத்திற்கு ஆசைபட்ட கரடி உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே நாவல் பழ மரத்தில் இருந்து தவறிவிழுந்த கரடி ஒன்று உயிரிழந்தது.

11 views

ஜவ்வாது மலையில் 22வது கோடை விழா தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஜமுனாமரத்தூரில் 22வது கோடை விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது.

11 views

கிருஷ்ணகிரி : காதல் திருமணம் செய்த ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்

கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

9 views

நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 பேர் காயம், வெடிமருந்து சப்ளை செய்த இளைஞர் கைது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, நாட்டு வெடிகுண்டு தயாரிக்க, வெடி மருந்து சப்ளை செய்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

4 views

மருத்துவர் கனவு தகர்ந்ததால் விபரீத முடிவு, வீட்டில் தூக்குபோட்டு மாணவன் தற்கொலை

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, மருத்துவ படிப்பில் சேர முடியாத விரக்தியில், மாணவன் ஒருவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

63 views

செங்கல்பட்டில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் நிறுத்தம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில்கள் சேவை இன்று காலை 11 மணி முதல் நிறுத்தப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

412 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.