ஏழை காத்த வீரமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே எலந்தங்குடியில் உள்ள ஏழைகாத்த வீரமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
ஏழை காத்த வீரமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
x
முன்னதாக யாகசாலைகள் அமைக்கப்பட்டு மூன்று கால பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பூர்ணாகுதி மஹா தீபாராதனை மற்றும் கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனையடுத்து கருவறை கோபுரத்தில் உள்ள, கோபுரகலசத்திற்கு  அபிஷேகம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

திருக்கோடீஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ பெருவிழா
திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் கோயிலில் 100 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை பிரம்மோற்சவ பெருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக நந்தியம் பெருமான் பொறிக்கப்பட்ட கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து  சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க தேவார திருவாசகப் பாடல்கள் பாடப்பட்டு மங்கள வாத்தியங்கள் இசைக்க  கொடியேற்றம் நடைபெற்றது.



Next Story

மேலும் செய்திகள்