கோவையை மிரட்டி வந்த கொள்ளை கும்பல் சிக்கியது : 91 பவுன் தங்க நகைகள் மீட்பு

கோவையில் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிவந்த பலே கொள்ளையர்கள் மூன்று பேர் போலீசார் வசம் சிக்கியுள்ளனர்.
கோவையை மிரட்டி வந்த கொள்ளை கும்பல் சிக்கியது : 91 பவுன் தங்க நகைகள் மீட்பு
x
கோவை கவுண்டம்பாளையத்தை அடுத்த சுப்பிரமணியம்பாளையத்தில் கட்ட‌ட கான்ட்ராக்டர் வீட்டில் 33 பவுன்  நகைகள், 1 லட்சம் ரூபாய்க்கும் மேல் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது. பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து, மூதாட்டியை தாக்கி கொள்ளையடிக்கப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து துடியலூர் போலீசார் சிசிடிவி காட்சிகள், கைரேகை என விசாரணையை துரிதப்படுத்தினர். அதன் ஒரு பகுதியாக, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இடையர்பாளையத்தில் 3 பேர் போலீசார் வசம் சிக்கினர். முன்னுக்கு பின் முரணான தகவல்கள் தெரிவித்த‌தால் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் மதுரையை சேர்ந்த விக்னேஷ், பாலமுருகன் மற்றும் சென்னை மயிலாப்பூரை சேர்ந்த தங்கராஜ் என்பது தெரிய வந்த‌து. கட்ட‌ட கான்ட்ராக்டர் வீட்டில் 33 பவுன் நகை மற்றும், 1 லட்சம் பணம், துடியலூரில் கல்லூரி அலுலவர் வீட்டில் 54 பவுன் நகை, கவுண்டம்பாளையம் மளிகை கடை உரிமையாளரிடம் 4 பவுன் தங்க சங்கிலி, என மூன்று பேரும் சேர்ந்து கோவையில் பல்வேறு இடங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்த‌து. இதையடுத்து அவர்களை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்த போலீசார், 91 பவுன் நகைகளை பறிமுதல் செய்த‌னர். 

Next Story

மேலும் செய்திகள்