தி.மு.க. பிரமுகர் வீட்டில் ரூ.3.48 லட்சம் கண்டெடுப்பு

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே தி.மு.க. பிரமுகர் வீட்டில் பணத்தைக் கைப்பற்றிய வருமான வரித்துறையினர், முறையான ஆவணங்கள் வைத்திருந்ததால் மீண்டும் ஒப்படைத்தனர்.
தி.மு.க. பிரமுகர் வீட்டில் ரூ.3.48 லட்சம் கண்டெடுப்பு
x
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே தி.மு.க. பிரமுகர் வீட்டில் பணத்தைக் கைப்பற்றிய வருமான வரித்துறையினர், முறையான ஆவணங்கள் வைத்திருந்ததால் மீண்டும் ஒப்படைத்தனர். கொளக்காட்டுப்புதூரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் வேலுச்சாமி வீட்டில் கோடிக்கணக்கில் பணம் இருப்பதாக ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து வருமானவரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, 3 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதற்கு உரிய ஆவணங்கள் இருந்ததால் அதிகாரிகள், அந்தப் பணத்தை ஒப்படைத்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்