கட்சியில் இருந்து விலகலா? - குஷ்பு விளக்கம்

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதாக வெளியான தகவல் குறித்து, நடிகை குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.
கட்சியில் இருந்து விலகலா? - குஷ்பு விளக்கம்
x
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதாக வெளியான தகவல் குறித்து, நடிகை குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளரான குஷ்பு, பிரச்சார களத்தில் இல்லை என்றவுடன், 'காங்கிரசில் இருந்து விலகி விட்டார்' என்ற தகவல் பரவியது. இது குறித்து தமது சமூக வலைதளபக்கத்தில், குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். ''நான் காங்கிரஸிலிருந்து விலகுகிறேனா? எங்கிருந்து இதெல்லாம் வருகிறது? இந்த நாட்டை உருவாக்கிய ஒரு இயக்கத்தின் அங்கம் நான். காங்கிரஸ் ஊழியராக இருப்பதில் பெருமையடைகிறேன். ராகுல் காந்தியை நம்புகிறேன் என்றும், தென் மாநிலங்கள் முழுவதும் பிரசாரம் தொடங்குகிறேன். ஐ யாம் காங்கிரஸ்' என்றும் பதிவிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்