தேர்தல் ஆணையர்கள் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை

தலைமை செயலாளர், டிஜிபி மற்றும் வருமான வரி துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
தேர்தல் ஆணையர்கள் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை
x
தமிழகத்தில் வரும் 18 ந்தேதி நாடாளுமன்ற மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி சென்னை வந்த இந்திய தேர்தல் ஆணையர்கள் சுசில் சந்த்ரா மற்றும் அசோக் லவசா ஆகியோர் நேற்று கிண்டியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.  

அதன்பிறகு, பின்னர் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் தேர்தல் ஆணையர்கள் மற்றும் தேர்தல் ஆணைய இயக்குநர்கள் தீலீப் சர்மா, திரேந்திர ஒஜா ஆகியோர் ஆலோசனை நடத்தினர். தேர்தல் ஏற்பாடு, வாகன சோதனை, விதிமீறல்கள், பதற்றமான வாக்குசாவடிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள்  உள்ளிட்டவை குறித்து சுமார் ஏழு மணி நேரம் விவாதிக்கப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக, வருமான வரித் துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன் இன்று காலை தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். மேலும், தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜபி மற்றும் மாநில உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். இதையடுத்து தேர்தல் ஆணையர்கள், செய்தியாளர்களை சந்தித்து தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து பேச உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்