சினிமா பாணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை

சினிமா பாணியில், சென்னை அருகே வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து மளிகை கடை உரிமையாளரிடம் 3 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா பாணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை
x
சென்னை கொரட்டூர் ரெட்டி தெருவில் சிவப்பிரகாசம் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். வாடகை காரில் வந்த மர்ம நபர்கள் ஐந்து பேர் வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறி தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டார்கள். அதற்கான போலி ஐடி கார்டையும் காட்டியுள்ளனர். கடை மற்றும் வீடு ஒரே இடத்தில் இருப்பதால் கடையை சோதனை செய்து, பின்னர் மாடியில் இருந்த வீட்டையும் சோதனையிட்டனர். அப்போது, அங்கிருந்த 3 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் 5 கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளார். கொள்ளையர்கள் போகும்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு வந்து முறையான கணக்கு காட்டிவிட்டு பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என கூறி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, நுங்கம்பாக்கம் சென்று அலுவலகத்தில் விசாரித்தபோது அதுபோன்ற நபர்கள் யாரும் இல்லை என்று தெரிவித்ததால் சிவப்பிரகாசம் அதிர்ச்சியடைந்தார். பின்னர் கொரட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சினிமா பாணியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்