திருப்பூர் உழவர் சந்தையில் நடந்து சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின்

திருப்பூர் உழவர் சந்தையில் திமுக தலைவர் ஸ்டாலின் நடந்து சென்று, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தார்.
திருப்பூர் உழவர் சந்தையில் நடந்து சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின்
x
திருப்பூர் உழவர் சந்தையில் திமுக தலைவர் ஸ்டாலின் நடந்து சென்று, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தார். திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து, பெருமாநல்லூரில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக வந்த திமுக தலைவர் ஸ்டாலின், தென்னம்பாளையம் உழவர் சந்தையில் வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் நடைபயணமாக சென்று வாக்கு சேகரித்தார். அவருடன் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், வேட்பாளர் சுப்பராயன் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் ராயபுரம் பகுதிக்கு சென்ற ஸ்டாலின் டீ சாப்பிட்டார். அப்போது ஸ்டாலினுடன், பொதுமக்கள் கை குலுக்கி செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்