முன்னாள் அமைச்சர் செல்வராஜ் மறைவு : முதலமைச்சர், துணை முதலமைச்சர் இரங்கல்
திருச்சியில் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் காலமானார்.
பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தை சேர்ந்த செல்வராஜ், 1980 முதல் 84 -ம் ஆண்டு வரை எம்பியாக பதவி வகித்துள்ளார். திருச்சி மாவட்ட திமுக செயலாளராகவும் அவர் பொறுப்பு வகித்துள்ளார். தி.மு.க விலிருந்து ம.தி.மு.க பிரிந்த போது ம.தி.மு.க விற்கு அவர் சென்றார். தி.மு.க. சார்பில் 2006ம் ஆண்டு முசிறி தொகுதியில் போட்டியிட்டு வென்ற அவர், தி.மு.க. அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக 2006 முதல் 2011ம் ஆண்டு வரை இருந்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு அ.தி.மு.க.வில் இணைந்த அவர், சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று அவர் காலமானார். அவரது இறுதி சடங்குகள் இன்று நடைபெறுகிறது. அவரது மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Next Story