"ஒரே நாடு, ஒரே மொழி என பாஜக செயல்படுகிறது" - வைகோ

தமிழகத்தை அனைத்து துறைகளிலும் மத்திய அரசு வஞ்சித்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரே நாடு, ஒரே மொழி என பாஜக செயல்படுகிறது - வைகோ
x
தமிழகத்தை அனைத்து துறைகளிலும் மத்திய அரசு வஞ்சித்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். வேலூர்  திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து பேசிய அவர் இவ்வாறு கூறினார். பாலாறு, மேகதாது அணை விவகாரங்களில் தமிழகத்தை, மத்திய அரசு வஞ்சிப்பதாக கூறிய வைகோ, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்பது எங்கே என்று கேள்வி எழுப்பினார். இந்தியா பலதரப்பட்ட மக்கள் வாழும் நாடு என்று கூறிய அவர், ஒரே நாடு, ஒரே மொழி என பாஜக செயல்படுவதாக வேதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்