இந்து அமைப்பு நிர்வாகி காருக்கு தீ வைப்பு : முன்விரோதம் காரணமாக தீ வைப்பா எனவும் போலீஸ் விசாரணை

சீனிவாசன் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டு இருந்த, அவரது காருக்கு ஒருவர் தீ வைத்துள்ளார்
இந்து அமைப்பு நிர்வாகி காருக்கு தீ வைப்பு : முன்விரோதம் காரணமாக தீ வைப்பா எனவும் போலீஸ் விசாரணை
x
கோவை கண்ணப்பன் நகரை சேர்ந்த சீனிவாசன், பாரத் சேனா அமைப்பின் மாநில செயலாளராக உள்ளார்.நேற்று சீனிவாசன் வீட்டின் அருகே  நிறுத்தப்பட்டு இருந்த, அவரது காருக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர்  தீ வைத்துள்ளார் .இதுதொடர்பாக சீனிவாசன் அளித்த புகாரின் பேரில், ரத்தினபுரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வீட்டின் அருகே உள்ள சி.சி.டி.வி.க்ளில் பதிவான காட்சிகள் உதவியுடன் நடத்திய விசாரணையில்,ஹெல்மெட் அணிந்து வந்த ஒருவர் வாகனத்துக்கு தீ வைத்து விட்டு ஓடுவது பதிவாகியுள்ளது.அதனடிப்படையில் தற்போது விசாரணை நடந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்