குன்றத்தூர் : உரிய ஆவணங்கள் இன்றி ரூ.53 லட்சம் பறிமுதல்
குன்றத்தூர் அருகே நடைபெற்ற வாகன சோதனையில், காரில் கொண்டு வரப்பட்ட 53 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
குன்றத்தூர் அருகே நடைபெற்ற வாகன சோதனையில், காரில் கொண்டு வரப்பட்ட 53 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும் பணத்தை சேகரித்து கொண்டு தேனாம்பேட்டையில் உள்ள தனியார் வங்கியில் பணத்தை செலுத்தும் தனியார் ஏஜென்சி நிறுவனம் என்றும், தற்போது ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சேகரித்த 53 லட்சத்தை எடுத்து செல்வதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்குரிய ஆவணங்கள் இல்லாததால், பறிமுதல் செய்யப்பட்ட தொகை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அரசு கருவூலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
Next Story